எளிமை

இளையதளபதி விஜய் பற்றி அறிந்திராதவர் எவரும் இலர்.இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு.புகழின் உச்சிக்கு சென்றாலும் விஜய் எப்போதும் தன் எளிமையை கைவிடாதவர்.

சிறந்த நடிகர்

தனது ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பவர்.ரசிகர்களும் விஜயை களங்கப்படுத்தும் விதமாக யாராவது ஏதாவது கூறினால் சும்மா இருக்க மாட்டார்கள்.அவர்களை மன்னிப்பு கேட்க வைக்கும் வரை விட மாட்டார்கள்.
அந்த வகையில் பிரபல பத்திரிக்கை ஒன்று மெர்சல் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருதை கொடுத்தது.

மன்னிப்பு

இந்த விருது வழங்கும் விழா சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இதை பிரபல தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியது.
இந்நிலையில் இந்த விருது விழாவில் அருவி படத்தின் படக்குழுவும் பங்கேற்றது. ஏனெனில் இந்த படம் பல விருதுகளை அள்ளியது.
இந்த படத்தில் விஜயை கிண்டல் செய்வது போன்ற காட்சிகள் வரும்.இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்தனர்.இதற்கு விஜய் ரசிகர்களிடம் எதிர்ப்பு கிளம்பவே அருவி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மன்னிப்பு கேட்டார்.

மனசு

ஆனால் விஜயோ விருது விழாவில் முதலில் அருவி பட குழுவை வாழ்த்தி விட்டுத்தான் போய் அமர்ந்தார்.விஜய் ரசிகர்கள் இதை குறிப்பிட்டு இதுதான் தளபதி மனசு என்று புகழ்ந்து வருகின்றனர்.