தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவரது மகன் சஞ்சய் "வேட்டைக்காரன்" படத்தில் இன்ட்ரோ பாடலுக்கு விஜயுடன்  நடனம் ஆடியிருந்தார். இதனையடுத்து சஞ்சய் தற்போது சினிமா சம்மந்தமாக படித்து வருகிறார். இதுவரை 2 குறும்படங்களை இயக்கி நடித்துள்ளார் சஞ்சய்.

இந்நிலையில், தற்போது சஞ்சய் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்க உள்ள படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் சஞ்சயுடன் விக்ரமின் மகன் துருவ்வும் சேர்ந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

2.0 - இந்தியன் 2 என்ற இரண்டு சீரியஸான படங்களை இயக்கிவிட்ட ஷங்கர், அடுத்ததாக நண்பன் படம் போல ஜாலியான ஒரு கதையை எடுக்கப்போகிறார். விக்ரமின் மகன் துருவ் சஞ்சயுடன் நடிக்கிறார் என்கிறார்கள். இந்தியன் 2  பட வேலைகள் அனைத்தும் முடிந்த பின்பே இப்படம் தொடங்கும்  எனவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.