தளபதி விஜயின் ரசிகர்கள் எப்படி அவரை கொண்டாடுகிறார்களோ, அதே போல், அவருடைய மகன் சஞ்சய், எது செய்தாலும் அதையும் வைரலாக்கி விடுவார்கள் விஜய் ரசிகர்கள்.  

தளபதி விஜயின் ரசிகர்கள் எப்படி அவரை கொண்டாடுகிறார்களோ, அதே போல், அவருடைய மகன் சஞ்சய், எது செய்தாலும் அதையும் வைரலாக்கி விடுவார்கள் விஜய் ரசிகர்கள். 

சமீபத்தில் கூட, பள்ளி விழாவில் சஞ்சய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஜய்யின் ரசிகர்கள் வைரலாக்கினர். அதே போல் தற்போது சஞ்சய் வேஷ்டி சட்டை அணிந்து, கையில் தேசிய கொடியோடு நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் வைரல் ஆக்கும் முயற்சி ஈடுபட்டுள்ளனர்.

விஜயின் ரசிகர்கள் சஞ்சய்க்கு கொடுக்கும் வரவேற்பை பார்த்தல், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அவர் படத்தில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி கொண்டாடப்பட்ட நடிகர் விஜய் - சங்கீதா 20 ஆம் ஆண்டு திருமண விழாவை கூட, விஜய்யின் ரசிகர்கள், போஸ்டர் அடுத்து, பட்டாசு வெடித்து, கேக் வெட்டி அவரின் வீடு விசேஷத்தை கூட, தங்களின் சந்தோஷமாக எண்ணி கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.