தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பரபரப்பாக நடித்து வரும் 'தளபதி 64 ' ஆவது படத்தின் படபிடிப்பு, சென்னையை அடுத்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் தற்போது நடந்து வருகிறது.

ஏற்கனவே சென்னை, பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்கு விஜயை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்தில் கூடினர்.

இதைதொடர்ந்து, தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் விஜய்யை பார்க்க கர்நாடகா விஜய் ரசிகர்கள் அங்கு கூடி வருகின்றனர். குறிப்பாக அவர் ஹோட்டலை விட்டு கிளம்பும் போது  அங்கு நூற்றுக்கணக்கான ரசிகர்களும், படப்பிடிப்பு தளத்திற்குள் செல்லும்போது அவரை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்களும் திரண்டு வைத்து அன்பு மழையை பொழிந்து வருகின்றனர்.

ரசிகர்களுக்காக விஜயும் ஒரு சில நிமிடங்கள் நின்று, ரசிகர்களுக்கு கைகாட்டி அவர்களுடைய அன்புக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்து வருகிறார். இது குறித்த ஒரு சில வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகிறது.

ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் இந்தப் படத்தை, விஜய்யின் நெருங்கிய உறவினர் ஜேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.