இயக்குனர் நேசன் இயக்கத்தில், விஜய் - மோகன் லால் அப்பா மகனாக நடித்து, கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், 'ஜில்லா'. 50 கோடியில் உருவான இந்த படம், 85 கோடி ரூபாய்க்கு மேல், பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில்... விஜய் அடித்த லூட்டி, வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

நடிகை காஜல் அகர்வால், இந்த படத்தில் இடம்பெற்ற... சூப்பர் ஹிட் பாடலான 'எப்ப மாமு ட்ரீட்டு' பாடலின் படப்பிடிப்பின் போது, நடுவே உள்ளே வரும் விஜய், காஜல் அகர்வாலிடம் சென்று கண்டாடியை காட்டி அவருக்கு மேக்அப் மேனாக மாறி பின் டான்ஸ் ஆடுவது போல் இந்த வீடியோ உள்ளது.

விஜய் எது செய்தாலும், அதனை ட்ரெண்ட் ஆக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வரும், விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவையும் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள். 'ஜில்லா' படத்திற்கு தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்.பி.சவுத்திரி தயாரிப்பில் வெளியான இந்த படத்தில், பூர்ணிமா ஜெயராம், நிவேதா தாமஸ், மகத், சூரி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.