விஜய் சேதுபதி கஷ்ட பட்டு சினிமாவில் சாதித்தவர், இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அனைத்து படங்களும்மே, சோடை போக வில்லை அதே போல தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ளார்.

றெக்க படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் எங்கும் குறை வைக்கவில்லை, இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதியின் நண்பராம்.

அதனால் இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ஆரஞ்சுமிட்டாய் படத்தை தயாரித்தவர், அந்த படத்தின் நஷ்டத்திற்காக தான் இந்த படத்திற்கு கால்ஷிட் கொடுத்தாராம்.

அதுமட்டுமின்றி றெக்க படத்திற்காக சுமார் ரூ 4 கோடி வரை விட்டுக்கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இப்படி நண்பருக்கு விட்டுக்கொடுத்து வாழவைக்கும் உள்ளங்களும் உண்டு என அமைதியாக நிரூபித்துள்ளார் இந்த ஹீரோ, இவரின் இந்த செயலால் ரசிகர்கள் மனதில் ரியல் ஹீராவாகவே நிலைத்து விட்டார். நியூஸ் பாஸ்ட் சார்பாக வாழ்த்துக்கள் விஜய்சேதுபதி.