இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடித்து வரும் சங்கத்தமிழன் படத்தின் டீசர் சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி தொடர்ந்து, பல வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அதன் அடிப்படையில் 'சூப்பர் டீலக்ஸ்',  'ஆரஞ்சு மிட்டாய்',  'விக்ரம்வேதா'  என ஹீரோயிஸம் காட்டும் கதை மற்றும் கதாபாத்திரங்களை தவிர்த்து வித்தியாசத்தையும் தன்னுடைய ரசிகர்களின், ரசனைக்கு ஏற்றவாறு கொடுத்து வருகிறார்.

இவர் தற்போது விஜய் சந்தர் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'சங்கத்தமிழன்'. இந்த படத்தை பாரதி ரெட்டி, என்பவர் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் டீசர் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இசையமைத்துள்ளார்.  ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவில்,  பிரவீன் படத்தொகுப்பு செய்கிறார்.  தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் டீசரில் விஜய் சேதுபதி மிகவும் ஸ்டைலீஷில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.  ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த வகையில் இந்த படம் உருவாகி உள்ளது. தற்போது வெளியாகியுள்ள டீசரின் மூலம் தெரியவருகிறது.

அந்த டீசர் இதோ: