vijay sethupathy got nepoliyan blockburster movie

சீவலப்பேரி பாண்டி என்றதுமே நம் நினைவிற்கு முதலில் வருவது நடிகர் நெப்போலியனும் அவருடைய கம்பீரமான மீசையும் தான். இந்தப் படம் கடந்த 1994ஆம் ஆண்டு பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்றது.அ'புது நெல்லு புது நாத்து' படத்தில் குணசித்திர வேடத்தில் அறிமுகமான நெப்போலியன் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக, தற்போதைய ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து கலக்கி வரும் சரண்யா பொன்வண்ணன் நடித்திருந்தார். சீவலப்பேரி பாண்டி திரைப்படம், நெப்போலியனின் திரைப் பயணத்தில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

தற்போது இந்தப் படத்தை தற்போதைய காலத்திற்கு ஏற்ப ஒரு சில மாற்றம் செய்து ரீமேக் செய்ய உள்ளார் பி.ஜி ஸ்ரீகாந்த் . மேலும் முதல் கட்டமாக இந்தப் படத்தில், நெப்போலியன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சம்பள பிரச்சனை காரணமாக பேச்சுவார்த்தை இழுபறியில இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். இவர் நெப்போலியன் நடித்து ஹிட் ஆன சீவலப்பேரி பாண்டி படத்திற்கு இசையமைத்த ஆதித்தியனிடம் கீபோர்ட் பிளேயராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.