vijay sethupathy first acting serial
பல தடைகளை தாண்டி மிகவும் கஷ்டப்பட்டு, தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பகாலத்தில் குறும்படங்கள், பட வாய்ப்புகள் என அலைந்து கொண்டிருந்த போது ஒரு சில சீரியல் நடிக்கவும் வாய்ப்புகள் தேடி அலைந்தார்.
அப்போது பிரபல தனியார் தொலைக்காட்சி எடுக்க இருந்த "சரவணன் மீனாட்சி" என்கிற சீரியலின் முதல் பாகத்தில் முதலில் சரவணன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது, விஜய் சேதுபதிதானம்.

இந்த சீரியலின் ஆடிஷன் நடைபெற்ற போது, முதலில் தேர்வு செய்யப்பட்ட விஜய் சேதுபதிக்கு திடீர் என ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதனால் இந்த சீரியலின் வாய்ப்பை தவிர்த்து விட்டாராம். இவர் விலகியதால் தான் அந்த வாய்ப்பு "மிர்ச்சி செந்திலுக்கு" சென்றது.

"சரவணன் மீனாட்சி" சீரியலில் இணைந்து நடித்த செந்தில் ஒரு கட்டத்தில் அதில் நாயகியாக நடித்த "ஸ்ரீஜாவை" உண்மையாகவே காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
