இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும்  மாதவன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் "விக்ரம் வேதா". இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர்  பன்னீர் செல்வம் இயக்கத்தில் "கருப்பன்" படத்தில் தற்போது  விஜய்சேதுபதி நடித்து முடித்திருக்கிறார். 

மேலும்  சமந்தாவிற்கு ஜோடியாக  "அநீதிக்கதைகள்", த்ரிஷாவுடன் " 96 ", கவுதம் கார்த்தியுடன் "ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே  மாதவன், மற்றும் ராம்சரண் தேஜாவை ஆகியோர், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்த தகவலை மாதவன் மறுத்திருந்தார். ஆனால் தற்போது, விஜய் சேதுபதி மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த படம் குறித்த அதிகார பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.