தமிழ் சினிமாவில் கடத்த 10 வருடங்களாக கதாநாயகியாக நடித்து வருபவர்கள் நடிகை திர்ஷா மற்றும் நயன்தாரா.

திர்ஷா:

சமீப காலமாக திர்ஷா நடித்து வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்தாலும், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு இருப்பதால் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

நயன்தாரா:

நாயன்தாரா ‘ராஜா ராணி’ படத்தின் ரீஎன்ட்ரிக்கு பிறகு வேறு லெவலுக்கு சென்றுவிட்டார். இந்த படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளிவந்த, ‘நானும் ரவுடிதான்’, ‘மாயா’, ‘அறம்’, ‘தனிஒருவன்’ போன்ற ஹிட் படங்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை பிடிக்க வைத்தது.

தற்போது இவருடன் சேர்ந்து நடிக்க பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டாலும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். விரைவில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள கோலமாவு கோகிலா படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இசை வெளியீட்டு விழா:

இந்நிலையில் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் நாயகனாக நடித்திருக்கும் ‘ஒண்டிக்கு ஒண்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு, இசையை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

யார் அழகு?

பின் இவரிடம் செய்தியாளர்கள் சில சுவாரிஸ்யமான கேள்விகளை எழுப்பினர். அவை ‘நீங்கள் திர்ஷா மற்றும் நயன்தாரா என இருவருடனும் நடித்து விட்டீர்கள், இவர்கள் இருவரில் யார் அழகு? என்று கேட்டபோது, பெண்களை அப்படியெல்லாம் பிரித்து பார்க்க முடியாது. பொதுவாகவே பெண்கள் எல்லோரும் அழகுதான் என்று பதில் அளித்தார்.

யார் பொருத்தமான ஜோடி?

இதைதொடர்ந்து திர்ஷா, நயன்தாரா என இருவருக்கும் ஜோடியாக நடித்து விட்டர்கள் இருவரில் உங்களுக்கு பொருத்தமானவர் யார் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த விஜய்சேதுபதி ‘என்னை பொறுத்தவரை திரையில் தோன்றும் நடிகர், நடிகைகளின் பொருத்தத்தை பார்க்ககூடாது. அந்த படத்தில் அவர்கள் ஏற்று நடித்த கதாப்பாத்திரத்தை பொறுத்தே அந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி தீர்மானிக்கப்படுகிறது என்று மிகவும் சுவாரிஸ்யமாக பதில் அளித்தார்.