சிவகார்த்திகேயன் தற்போது, பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு, அடுத்ததாக ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தில் 2.0 பட பிரபலங்கள் இருவர் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி ஒளிப்பதிவு பணிகளை நிரவ் ஷாவும், கலை பணிகளை முத்துராஜும் மேற்கொள்ள இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது விஞ்ஞானி தொடர்பான கதையாக உருவாக இருக்கிறதாம், வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானியாக சிவா நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக கூறப்படுகிறது.

ரஜினிக்கு தம்பியாக நடிக்கவிருக்கிறாராம் விஜய் சேதுபதி!

ரஜினி நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகிறது. ரஜினி அடுத்ததாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைத்திருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குள் ரஜினி தனது அரசியல் பணிகளை ஓரளவு முடித்துவிட திட்டமிட்டிருக்கிறாராம். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா’, ‘இறைவி’ படங்களில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார்.

எனவே, ரஜினி நடிக்கும் இந்த படத்திலும் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்று செய்தி வெளியாகியது விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், ரஜினியின் தம்பியாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக புதிய தகவல் பரவி வருகிறது. உண்மையாகவே, விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கிறாரா? இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரஜினியோடு சேருவது பற்றி விஜய்யே சொல்வார் ... SAC பேச்சு!

இன்று தமிழகத்தில் அரசியல் மிக பெரிய அளவில் சூடுபிடித்து இருக்கிறது அதற்க்கு முக்கிய காரணம் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் வந்தது தான், நாளுக்கு நாள் செய்தி வந்த வண்ணம் உள்ளது. நேற்று விஜய் அப்பா பேசும் போது விஜய் அரசியல் குறித்து பேசினார் அப்போது சூப்பர் ஸ்டாருடன் இணைவதை பற்றியும் பேசினார்.

ரஜினி, கமல் என அனைவரும் அரசியலுக்கு வந்துள்ளதால் தளபதி விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கூறிவருகிறார்கள், இந்நிலையில் இவர் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவதாக தகவல் வைரலாகி வருகிறது. இதை பற்றி செய்தியாளர் சந்திப்பில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி-யிடம் கேட்கப்பட்டது அதற்க்கு அவர் விஜய் எப்பொழுதும் தனித்து முடிவெடுப்பவர், ரஜினியுடன் இணைவது பற்றி அவர் தான் முடிவெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.