Asianet News TamilAsianet News Tamil

வசமாய் சிக்கிய விஜய் சேதுபதி... விடாமல் துரத்தும் மகா காந்தி... சென்னைக்கு வந்து நடத்திய சம்பவம்..!

பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியின் உதவியாளர் தன்னை தாக்கியதாகவும், அவமரியாதை செய்ததாக நடிகர் மகாகாந்தி என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 
 

Vijay Sethupathi trapped in possession ... Maha Gandhi chasing relentlessly ... The incident that took place in Chennai ..!
Author
Tamil Nadu, First Published Dec 5, 2021, 2:03 PM IST

நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி  சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்
மனுத்தாக்கல் செய்துள்ளார் மகா காந்தி.Vijay Sethupathi trapped in possession ... Maha Gandhi chasing relentlessly ... The incident that took place in Chennai ..!

பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியின் உதவியாளர் தன்னை தாக்கியதாகவும், அவமரியாதை செய்ததாக நடிகர் மகாகாந்தி என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

சில நாட்களுக்கு முன்னதாக, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தியவர் இந்த மகா காந்தி. அது தொடர்பான  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. கைது செய்யப்பட்ட மகா காந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ‘’நான்தான் உதைத்தேன். விஜய் சேதுபதியை நான் கடவுளாக வணங்கக்கூடிய பசும்பொன் ஐயாவையும், தமிழகத்தையும் மிகவும் கேவலமாக பேசியதால் விஜய் சேதுபதியை மிதித்தேன்’’ எனத் தெரிவித்தார் மகாகாந்தி.  Vijay Sethupathi trapped in possession ... Maha Gandhi chasing relentlessly ... The incident that took place in Chennai ..!

படப்பிடிப்புக்கு சென்ற விஜய் சேதுபதி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு (Vijay Sethupathy attacked) பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், விஜய் சேதுபதியை தாக்கிய மகா காந்தி என்ற நபர் தற்போது, விஜய் சேதுபதி மற்றும் அவரது உதவியாளர் ஜான்சன் மீது வழக்கு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பவும், 294(b),323,500 மற்றும் 506(பி), 323,500 மற்றும் 506 இன் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என்றும் மனுவில் மகா காந்தி கேட்டுக் கொண்டு உள்ளார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios