ஷாருக்கானை பல வருஷம் கரம் வச்சு பழி தீர்த்த விஜய் சேதுபதி! இப்படி ஒரு பிளாஷ் பேக் ஸ்டோரியை எதிர்பார்க்கல!
நடிகர் ஷாருக்கானை பழிவாங்கி விட்டதாக விஜய் சேதுபதி கூறிய பிளாஷ்பேக் ஸ்டோரி, வைரலாகி வருகிறது.
இயக்குனர் அட்லீ 'பிகில்' படத்தின் ரிலீஸ்க்கு பின்னர், சுமார் நான்கு வருடங்கள் கழித்து இயக்கி முடித்துள்ள திரைப்படம் 'ஜவான்'. ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மூலம், அட்லீ பாலிவுட் திரை உலகில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். மேலும் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அட்லீ இயக்கிய முதல் படமான, 'ராஜா ராணி' படத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாரா நடித்துள்ளார்.
மேலும் விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோன், பிரியாமணி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை, ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்துள்ளார். சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தை பான் இந்தியா திரைப்படமாக, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளது. அதன்படி ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இசையில் 'ஜவான்' படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'ஜவான்' படத்தின் ப்ரீ ஈவென்ட் நிகழ்ச்சி சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியான சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு ஷாருக்கானுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். எனினும் நயன்தாரா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார், என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தற்போது ஜவான் படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி கூறிய தகவல், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேடைக்கு வந்து பேச துவங்கிய விஜய் சேதுபதி, "ரசிகர்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருப்பது என்னை சந்தோஷப்படுத்துகிறது. உங்களால் தான் இந்த நிகழ்ச்சி மேலும் சிறப்படைகிறது. ஐ லவ் யூ ஆல் என கூறினார். பின்னர் ஜவான் படம் அட்லீயால் தான் துவங்கியது. அட்லீயை பற்றி கூற நிறைய விஷயங்கள் உள்ளது. தன்னுடன் பழகியவர்களை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பது அட்லீக்கு நன்றாகவே தெரியும். அட்லீ இந்த படத்திற்காக என்னை நிறைய வேலை வாங்கி சாகடித்து விட்டார் என கலகலப்பாக பேசினார்.
தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, ஷாருக்கானை பழிவாங்கி விட்டதாக கூறி தன்னுடைய ஃப்ளாஷ்பாக் ஸ்டோரி ஒன்றையும் பகிர்ந்து கொண்டார். அதாவது விஜய் சேதுபதி பள்ளியில் படிக்கும் போது, ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்தப் பெண் அப்போது ஷாருக்கானை காதலித்ததாகவும் கூறினார். இதற்கு பழிவாங்க இத்தனை ஆண்டுகள் ஆகும் என்று நினைக்கவில்லை. ஆனால் ஒரு வழியாக இப்போது பழிவாங்கி விட்டேன் என விஜய் சேதுபதி சொல்லிய இந்த குட்டி ஸ்டோரி அரங்கத்தையே கைத்தட்டல்களால் அலற வைத்தது.
79-ஆவது பிறந்தநாளை மகள்களுடன் கொண்டாடிய பழம்பெரும் நடிகர் விஜயகுமார்! வைரலாகும் பர்த்டே போட்டோஸ்!
இதை தொடர்ந்து, நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக்கானுக்கு அருகில் எனக்கு சீட் போடப்பட்டிருந்தது. அப்போது அவர் நீங்க ரொம்ப நல்ல நடிகர் என்று என்னை பாராட்டினார். பின்னர் என் வயது என்ன என்று கேட்டார். நான் நாற்பது என்றேன் நல்லா நடிக்கிறீங்க என்று என்னை பாராட்டினார். எனக்கு அவரிடம் பிடித்தது அனைவரையும் சமமாக நடத்துவது தான் என்று விஜய் சேதுபதி பேசியுள்ளார்.