முத்தையா முரளிதரன் பயோபிக் சர்ச்சையால் 800 படத்திலிருந்து விலகுவதாக இல்லையா? என்பது குறித்து விஜய் சேதுபதி முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வரும் 800 என்ற படத்தில் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் விஜய் சேதுபதிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முத்தையா முரளிதரன் சிங்கள அரசின் கைக்கூலி என்றும் எனவே அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது எனவும் தமிழகம் முழுவதும்  கண்டன குரல்கள் எழுந்துள்ளது

.

இந்நிலையில் முத்தையா முரளிதரன் குறித்த 800 பயோபிக் திரைப்படத்தில் இருந்து விலகுவதாக இல்லையா என்பது பற்றி ஓரிரு நாட்களில் நடிகர் விஜய் சேதுபதி முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.