ரசிகர்களை கவரும் விதமாக அமைந்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர், வெளியான ஒரே நாளில் யூடியூப்பில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் காதலில் விழ காரணமாக அமைந்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக விக்னேஷ் சிவன் (Vignesh shivan) தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார். இந்நிறுவனம் மூலம் நெற்றிக்கண், கூழாங்கல் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அடுத்ததாக இந்நிறுவனம், தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி (vijay sethupathi) ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி ரேம்போ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் நயன்தாரா (Nayanthara), கண்மணி என்கிற கதாபாத்திரத்திலும், சமந்தா (Samantha) கத்திஜா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் காத்துவாக்குல ரெண்டு காதல் (kaathuvaakula rendu kaadhal) படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. 

ரசிகர்களை கவரும் விதமாக அமைந்திருந்த இந்த டீசர், வெளியான ஒரே நாளில் யூடியூப்பில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. இதனையொட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் கையில் அம்புடன் பாகுபலி பட கெட்டப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் இருந்தனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.