தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும், வித்தியாசம் காட்டி நடித்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் 'சிந்துபாத்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும், வித்தியாசம் காட்டி நடித்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் 'சிந்துபாத்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஒரே மாதிரி படங்களை தேர்வு செய்து நடிப்பதை தவிர்த்து, படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வரும் நடிகர் விஜய்சேதுபதி. 'பேட்ட' படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்திருந்தார். 96 படத்தில் காதலுக்காக வாழ்பவராகவும், சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும் நடித்து அசத்தியிருந்தார்.

இவருடைய படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த வகையில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் சிந்துபாத். 

இந்த படம் மே மாதம் 16ஆம் தேதி வெளியாக உள்ளதாக சமூகவலைதளத்தில், விஜய் சேதுபதி உறுதி செய்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள, இந்த படத்திற்கு விஜய் கார்த்தி கண்ணன் ஒளிப்பதிவும் ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.