விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் இயக்குனர் அருண்குமார் இயக்கி இருக்கும் திரைப்படம் 'சிந்துபாத்' தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

'சிந்துபாத்' படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து, சமீபத்தில் செகண்ட் லுக் ஒன்றையும் வெளியிட்டனர். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகனும் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே 'நானும் ரவுடி தான்' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டீசரில் நடிகர் விஜய் சேதுபதி பேசுயுள்ள வசனம் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது "இங்க எல்லார் வாழ்க்கையிலையும் பிரச்சனை இருக்கு, பிரச்சனையை பார்த்து ஓடி ஒளிஞ்சா... அது துரத்தும் நம்ப ஓடணும், அதுவே நம்ப திரும்பி, நின்னு முறைச்சா... இவ்வவு நேரம் இவன தான துரத்துனோம் என்கிற வெட்கமே இல்லாம தலைதெறிக்க ஓடும், நம்ம ஓடனும்மா இல்ல அத ஓட விடணுமா" என பேசியுள்ளார்.  

யுவன்ஷங்கர் ராஜா இசையில் விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வாசன் மூவீஸ் மற்றும் கே புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் டீசர் இதோ: