எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் கமலின் மகள் ஸ்ருதியுடன் விஜய் சேதுபதி முதல்முறையாக இணைந்து நடிக்கும் ‘லாபம்’ படத்தின் புதிய கெட் அப் ஒன்று சற்றுமுன்னர் வெளியாகி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.`லாபம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லாபம் படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்திற்காக புதிய கெட்டப்பபில் விஜய் சேதுபதி நடித்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அடர்ந்த முடி, அடர்ந்த தாடியுடன் விஜய் சேதுபதியின் இந்த கெட்டப் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

விஜய் சேதுபதியின் தோற்றத்தைப் பார்க்கும்போது அது ஓரளவு ஜக்கி வாசுதேவின் தோற்றத்தை நினவூட்டுவதாகவும் ஏற்கனவே சில வித்தியாசமான கதைகளை இயக்கியுள்ள ஜனநாதன் இப்படத்தில் ஜக்கி வாசுதேவ் குறித்து எதையாவது படமாக்கிக்கொண்டிருக்கக்கூடும் என்ற சந்தேகங்கள் எழுகின்றன.