’சூப்பர்ப் டீலக்ஸ்’, ‘மாமனிதன்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கும் நிலையில் நிவேதா பெத்துராஜ், ராஷி கன்னா ஆகிய இரு நாயகிகளுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியது.

’சூப்பர்ப் டீலக்ஸ்’, ‘மாமனிதன்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கும் நிலையில் நிவேதா பெத்துராஜ், ராஷி கன்னா ஆகிய இரு நாயகிகளுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

‘பாதாள பைரவி’, ‘மாயா பஜார்’, ‘மிஸ்ஸியம்மா’, எம்.ஜி.ஆர் நடித்த – ‘எங்க வீட்டு பிள்ளை’, ‘நம் நாடு’, ரஜினிகாந்த் நடித்த ‘உழைப்பாளி’, கமலஹாசன் நடித்த ‘நம்மவர்’ மற்றும் ‘தாமிரபரணி’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’, ‘வீரம்’, ‘பைரவா’ உட்பட 60-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை தயாரித்த பழம் பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.

இந்த நிறுவனம் தற்போது தனது புதிய படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கிறார். இது தயாரிப்பாளர் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் 6-வது படமாகும்.

விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஸ்கெட்ச்’ படத்தின் இயக்குநரான விஜய் சந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் விஜய் சேதுபதி, இயக்குநர் விஜய் சந்தருடன் முதன் முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ராஷி கன்னா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் இருவரும் முதன் முதலாக ஜோடி சேருகிறார்கள். ‘சுந்தர பாண்டியன்’, ‘ரம்மி’ ஆகிய படங்களுக்கு பிறகு நடிகர் / காமெடியன் சூரி 3-வது முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் போன்ற நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது.