நடிகர் விஜய் தேவாரக்கொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'டியர் காம்ரேட்' படத்தில் இடம்பெற்ற,  காம்ரேட் ஆன்தம் பாடலை விஜய் சேதுபதி தமிழில் பாடியுள்ளார்.  தற்போது இந்தப் பாடல் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலரால் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

அறிமுக இயக்குனர் பாரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'டியர் காம்ரேட்'.  இந்த படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் தயாராகி உள்ளது.

 

டியர் காம்ரேட் படத்திற்காக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஆன்தம் பாடலை முன்னணி நடிகர்கள் பாடியுள்ளனர்.  அந்த வகையில் மலையாளத்தில் துல்கர் சல்மானும், தெலுங்கில் நடிகர் விஜய் தேவாரக்கொண்டாடவே பாடியுள்ளார்.  வரும் 26 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பாடலும் வெளியாகியுள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.