கமல் ஹாசனின் 60 ஆண்டுகால சினிமா பயணத்தை சிறப்பிக்கும் வகையில்  "உங்களில் நான்" நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, வடிவேலு, பார்த்திபன், ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பிரபலங்கள் பலரும் கமல் ஹாசனை வாழ்த்தி பேசினர். 

இந்நிலையில் விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியும் தனது பங்கிற்கு கமலை வாழ்த்த மேடையேறினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெயரே மிகவும் பிடித்துள்ளதாகவும், அவர் அரசியலுக்கு வந்ததை நான் வரவேற்கிறேன் என்றும் குறிப்பிட்டார். அவரது மக்கள் நீதி மய்யம் கட்சி சின்னமே அனைவரும் இணைந்திருப்போம் என்பதை வலியுறுத்துவதாக உணர்கிறேன். கமல் ஹாசன் எப்போதும் மக்களை ஏமாற்ற மாட்டார், எனக்கு நம்பிக்கையிருக்கு என்று தெரிவித்தார். 

அதாவது களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கி உலக நாயகனாக உச்சம் தொட்டது வரை 60 ஆண்டுகள் கமல் ஹாசன் மக்களை மகிழ்வித்துள்ளார். அதேபோல் அரசியலிலும் மக்கள் நம்பிக்கையை நிரூபிப்பார் என்று சூசமாக வாழ்த்து தெரிவித்தார் விஜய்சேதுபதி. இந்தியன் 2-வில் நடிக்க தனக்கு அழைப்பு வந்ததாகவும், சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போனது வருத்தம் அளிப்பதாகவும் மேடையில் பேசினார். இதனையடுத்து கமல் ஹாசனை நேரில் சந்தித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உங்களுடன் நடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு தாங்க சார் என கமல் ஹாசனிடம் ஸ்ட்ராங்கான கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.