கோலிவுட் திரையுலகில் ரஜினி, கமல், தனுஷ், உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் இரண்டாம் பாகமாக உருவாகி வெளிவந்து கொண்டிருக்கின்றது. அவற்றில் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுத்தாலும், சில படங்கள் வெற்றி பெறுவது இல்லை. 

இந்நிலையில் முதல் முறையாக நடிகர் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'சேதுபதி' படத்திற்கு  விரைவில் இரண்டாம் பாகமாக உருவாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த 2016ஆம், இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நபீசன் நடித்து, விஜய்சேதுபதி கம்பீர போலீஸ் அதிகாரியாக நடித்த படம் 'சேதுபதி'. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால், தற்போது 'சேதுபதி 2' திரைப்படத்தை உருவாக்க படக்குழுவினர் முயற்சித்து வருவதாகவும் விரைவில் இது குறித்து தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தை ஏற்கனவே தயாரித்த வாசன் மூவீஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படங்களை தவிர விஜய் சேதுபதியின் 'சிந்துபாத்' மற்றும் 'மாமனிதன்' ஆகிய திரைப்படங்களையும் இந்த நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.