நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 5 வது முறையாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில், மிக குறுகிய காலத்தில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாகியுள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. சம்பாதிக்கும் பணத்தை தானே வைத்து கொள்ளாமல், விவாசாயிகள் பிரச்சனை, மற்றும் பல்வேறு சமூக நலனுக்காக செலவு செய்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, தர்மதுரை, இடம் பொருள் ஏவல், ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பெரிய கதாநாயகர்கள் படங்களில் நடிப்பதை விட சிறு கதாப்பாத்திரமாக இருந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான 'காக்க முட்டை', கனா ஆகிய படங்கள், இவரை மற்றொரு தளத்திற்கு எடுத்து சென்றது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், கே.ஆர்.ஜே ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். விரைவில் இந்த படம் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.