கல்கியின்,  காவிய படைப்பான 'பொன்னியின் செல்வன்' நாவலை, படமாக்க பல ஆண்டுகளாகவே முயற்சித்து வருகிறார்  பிரபல இயக்குனர் மணிரத்னம்.  

இந்நிலையில் இந்த படத்தின் பணிகள் துவங்கி விட்டதாகவும்,  விஜய் சேதுபதி, விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் உள்பட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.

தற்போது இந்த படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிவிட்டதாக கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கும் இந்த படம் காலதாமதமாகி வருவதாகவும், அடுத்தடுத்து விஜய்சேதுபதி பல படங்களில் கமிட் ஆகி வருவதாலும் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

'செக்க சிவந்த வானம்' படத்திற்கு பின்னர் மீண்டும் மணிரத்னம் படத்தில்  விஜய்சேதுபதி நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில்,  தற்போது அவர் இந்த படத்தில் இருந்து விலகியிருப்பதாக வந்துள்ள செய்தி அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.