நடிகர் விஜய் சேதுபதி - அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள, சிந்துபாத் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகி, விஜய் சேதுபதி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

இயக்குனர் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவருடைய மகன் சூர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'சிந்துபாத்'. அஞ்சலி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை வாசன் மூவிஸ் கே.புரோடக்ஷான் நிறுவனம் தயாரித்துள்ளது.

 ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் ஜூன் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.