இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. தெலுங்கில் இதே படம் விஜய் சேதுபதி என்ற பெயரில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தீபாவளி விருந்தாக திரைக்கு வரவிருந்த படம், பிகில், கைதி ரிலீசால் தள்ளிப்போனது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். 

இதனிடையே பாலிவுட், டோலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்றுள்ளார். பாலிவுட் பிரபலங்களான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஆலியா பட், ஆயுஷ்மான் குர்ரானா, மனோஜ் பாஜ்பை, பார்வதி, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகியோருடன் விஜய் சேதுபதி புகைப்படம் எடுத்துள்ளார். சினிமா குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சில் பங்கேற்ற விஜய் சேதுபதி, பிரபலங்களுடன்நின்று அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

சமீபத்தில் க/பெ ரணசிங்கம் படப்பிடிப்பின் போது ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் விஜய் சேதுபதி எடுத்துக் கொண்ட புகைப்படம் செம வைரலானது. இதையடுத்து தீபிகா படுகோனே, ஆலியா பட், பார்வதி என மூன்று நடிகைகள் உள்ள கலர்ஃபுல் காம்போவில் விஜய் சேதுபதி, அடக்கமாக நின்றிருக்கும் போட்டோ சோசியல் மீடியாவில்  செம மாஸ் காட்டி வருகிறது.