அதிர்ச்சியில், கொஞ்சநஞ்சமல்ல   ரொம்பவும் ஆடித்தான் போயுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.காரணம் கைக்கு வந்து சேர்ந்திருக்கும் ‘சிந்துபாத்’படத்தின் மூன்று நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட். அதிலும் சென்னை நகர கலெக்‌ஷனைப் பார்த்தவருக்கு கண்ணீரே வந்துவிட்டது என்கிறார்கள்.

விஜய் சேதுபதி - அஞ்சலி நடிப்பில் கடந்த 4 நான்கு நாட்களுக்கு முன்பு  சிந்துபாத் படம் திரைக்கு வந்தது. இப்படம் பெரிய வெற்றியடையும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். இயக்குநர் அருண்குமார் மேலிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் விஜய் சேதுபதியும் இப்படத்தை மலைபோல நம்பினார். 

ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை அடையவில்லை என்பது மட்டுமல்ல இதற்கு முன் படு தோல்வி அடைந்த ‘சீதக்காதி’ படத்தை விடவும் மோசமான வசூலைச் சந்தித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், முறையான ப்ரோமோஷன் இல்லாதது, படத்தின் ரிலீஸ் தேதி சில முறை தள்ளிப்போனது என்று விஜய் சேதுபதி சமாதானம் செய்துகொண்டாலும் தன் மகன் நடித்த முதல் படம் இப்படி ஆகிவிட்டதே என்று நொந்துபோய்விட்டாராம்.  இந்த படம் 3 நாட்களில் சென்னையில் ரூ 94 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் ரூ 5 கோடி வரை இப்படம் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.