Vijay Sethupathi Karuppan film trailer is released
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ’கருப்பன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
‘ரேணிகுண்டா’ படத்தை இயக்கிய இயக்குநர் பன்னீர்செல்வம், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘கருப்பன்’.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தில் நாயகியாக நடித்த தன்யா நடிக்கிறார்.
இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைத்து உள்ளார்.
விஜய் சேதுபதி உடன் பாபி சிம்ஹா, கிஷோர், பசுபதி, சிங்கம் புலி ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதைக் கருவாக சல்லிக்கட்டு அமைந்துள்ளது என்பதை இதன் போஸ்டர் ரிலீஸில் காண முடிகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது.
இதில், முறுக்கு மீசையுடன் மக்களை கவரும் கிராமத்து இளைஞனாக விஜய் சேதுபதி உலா வருகிறார்.
