Asianet News TamilAsianet News Tamil

ஒரு பாவியை போல் உணர்கிறேன்! 'லாபம்' திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் உருகிய விஜய் சேதுபதி!

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'லாபம்' திரைப்படம், அடுத்த வாரம் செப்டம்பர் 9ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. 
 
vijay sethupathi emotional speech in laabam press meet
Author
Chennai, First Published Sep 3, 2021, 6:43 PM IST

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'லாபம்' திரைப்படம், அடுத்த வாரம் செப்டம்பர் 9ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. 

இதில் இந்த படத்தின் நடிகரும், தயாரிப்பாளருமான நடிகர் விஜய் சேதுபதி, படத்தின் மற்றொரு  தயாரிப்பாளர் ஆறுமுகக்குமார், இசையமைப்பாளர் இமான், ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி , நடிகர்கள் ரமேஷ் கண்ணா, சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு, செய்தியாளர் சந்திப்பு துவங்குவதற்கு முன், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் கலந்து கொண்டனர்.

vijay sethupathi emotional speech in laabam press meet

'லாபம்' படம் பற்றியும், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் குறித்தும் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ஜூனியர் ஆர்டிஸ்ட் வாய்ப்புக்காக ஜனநாதனின் வீட்டு கதைவை தட்டியது முதல் அவரை எனக்கு தெரியும். அவரை இழந்த நிலையில் ஒரு  பாவியை போல என்னை உணர்கிறேன் , தந்தை மகன் உறவு போல அவர் இருக்கும்போது அவரது அருமை புரியவில்லை. அவர் மரணம் மூலம் காலம்  கேவலமானது என உணர்கிறேன். 

vijay sethupathi emotional speech in laabam press meet

எஸ்.பி.ஜனநாதன் ஒரு கதையை தொடங்குவார்,  இடையிலேயே கதையில் பல மாற்றங்களை செய்வார். இதுதான் க்ளைமாக்ஸ் , வசனம் என்று அவரது படத்தில் முன்கூட்டியே கணிக்க முடியாதவறு மாற்றங்களை செய்து கொண்டே இருப்பார். இந்த படத்திற்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. என் அப்பா பாட்டன் செய்த புண்ணியத்தால் இப்படத்தில் நடித்து தயாரித்துள்ளேன். திரைப்படம் பொழுதுபோக்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் திரைப்படங்கள் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. மக்கள் சிந்திக்க வேண்டியதை திரைப்படங்கள் கற்றுத் தருகின்றன. மொழி வேறுபாடு இன்றி அனைவரின் உணர்வையும் தொடுவது திரைப்படங்கள்.  

vijay sethupathi emotional speech in laabam press meet

என் பிள்ளைகளுக்கு சினிமா மூலமே பாடம் நடத்துகிறேன் , ஏனென்றால் இதுதான் என் தொழில். எந்த படத்தையும் குறை கூறாமல் அதிலுள்ள ஐடியாக்களை தெரிந்துகொள்ளுமாறு என் பிள்ளைகளுக்கு  அறிவுரை கூறுவேன். தன்னை அறிவாளி என்று காட்டிக் கொள்ளவே  மற்றொருவர் படைப்பை ஒருவர் குறை கூறுகிறார். நான் ஒரு முட்டாள் , இந்த படம் குறித்து அதிகமாக என்னால் பேச முடியாது. திரையரங்கங்களை திறக்க அனுமதியளித்த தமிழக அரசுக்கு மிக்க நன்றி. சினிமா தொழில் மூலம் பல லட்சம் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது என உருக்கமாக தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios