நடிகர் விஜய்சேதுபதி, முன்னணி கதாநாயகனாக இருந்தபோதிலும் தொடர்ந்து கதைக்கும், கதாபாத்நிறத்திற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த 'விக்ரம் வேதா','பேட்ட' ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

மேலும் ஒரே மாதிரியான கேரக்டரில் நடிக்க விரும்பாத விஜய்சேதுபதி ,  தான் நடிக்கும் படங்களின் கதாபாத்திரத்தில் வித்தியாசம் காட்டி வருகிறார்.  அந்த வகையில்,  இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, இயக்கத்தில் நடித்து வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தில்,  ஷில்பா என்கிற திருநங்கை வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன், பகத் பாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணா, ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.  ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் வெளியான போது அனைவரையும் விஜய் சேதுபதியின் லேடி கெட்டப் கவர்ந்தது.

தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் புரோடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் தோன்றும், ஷில்பா கெட்டப்பில் விஜய் சேதுபதி பிரபல நடன இயக்குனர் சல்சா மணியுடன் இணைந்து டிக் டாக் ஆப்பில், டூயட் பாடலுக்கு நடனமாடியுள்ளார் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.