நடிகர் விஜய் சேதுபதி, ஒரு நடிகராக எந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளாரோ... அதையும் தாண்டி, கண்ணுக்கு தெரியாமல் பல்வேறு உதவிகள் செய்து மக்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.  

தற்போது மிகவும் பிஸியாக அரை டஜனுக்கும் அதிகமான படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். அதில் ஒன்று, இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் இவர் நடித்து வரும், 'லாபம்' திரைப்படம்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, நீண்ட இடைவெளிக்கு பின், உலகநாயகன் மகள், ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசும் படமாக இப்படம், இயக்கப்பட்டு வருகிறது.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பெறுவயல் என்கிற கிராமத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. 

விஜய் சேதுபதியும், இப்படத்தில் விவசாய சங்க தலைவராக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்திற்காக விவசாய சங்க கட்டிடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது. எனவே படக்குழுவினர் செட் போட ஏற்பாடு செய்தார்கள்.

ஆனால், இந்த படத்தில் நடிகராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வரும், விஜய் சேதுபதி... செட் போடுவதை விட, உண்மையாக கட்டிடம் காட்டினாள், அது மக்களுக்கும் உபயோகமாக இருக்கும் என எண்ணி, உண்மையிலேயே லட்ச கணக்கில் செலவு செய்து விவசாய கட்டிடம் ஒன்றை கட்டி அதனை அந்த கிராம மக்களுக்கு வழங்கியுள்ளார்.

விஜய்சேதுபதியின் இந்த செயல், பெறுவயல் கிராம மக்களை பிரமிக்க வைத்துள்ளது. மேலும் இந்த தகவல் வெளியேற வர, விஜய் சேதுபதி ரசிகர்கள் மட்டும் இன்றி மக்களும் தங்களுடைய வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.