Asianet News TamilAsianet News Tamil

டிசைன் டிசைனா அட்வைஸ்.. ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசுனு பஞ்ச் பேசும் விஜய் சேதுபதி - பிக் பாஸ் புதிய ப்ரோமோ!

Bigg Boss Season 8 Tamil Promo : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனின் புதிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. சுவாரசியமான பல விஷயங்கள் இந்த பொரோமோவில் இடம்பெற்றுள்ளது.

vijay sethupathi bigg boss season 8 new promo out now ans
Author
First Published Sep 11, 2024, 11:15 PM IST | Last Updated Sep 11, 2024, 11:15 PM IST

கடந்த ஏழு ஆண்டுகளாக 7 சீசன்களாக கோலிவுட் சின்னத்திரை வரலாற்றில் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு பயணித்து வந்த ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்காவிற்கு AI தொழில்நுட்பம் குறித்து சுமார் 3 மாதங்கள் கோர்ஸ் ஒன்றை படிக்கச் சென்றுள்ளார் கமல். எனவே எதிர்வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை அவர் தொகுத்து வழங்க முடியாமல் போனது. 

இது குறித்து அண்மையில் அவர் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். அடுத்தபடியாக இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்கின்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்து. இந்த சூழலில் தான் சில தினங்களுக்கு முன்பு, பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தமிழில் தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. 

'கோட் ' படத்தில் சினேகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? வெங்கட் பிரபு கூறிய தகவல்!

வருகின்ற அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி துவங்க உள்ள நிலையில், அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 குறித்த ஒரு புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. முதலில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு கோட் தைத்துக் கொடுக்கும் டெய்லர் ஒருவர், இந்த உடை உங்களுக்கு பர்ஃபக்ட்டாக இருக்கிறது என்று கூற, அவரிடம் ஓகே சொல்லிவிட்டு புறப்படுகிறார் விஜய் சேதுபதி. 

காரில் சென்று கொண்டிருக்கிறார் போது அவரிடம் பேசும் காரின் டிரைவர், கார்வலம் போனால் மட்டும் போதாது சார், நீங்கள் ஊர்வலமும் செல்ல வேண்டும் என்று கூற உடனடியாக மக்களோடு மக்களாக ஜாகிங் செல்லும் மக்கள் செல்வனிடம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் "குரூப்பிசம்", டாமினேஷன் பண்றவங்கள எல்லாம் ஓட ஓட விரட்ட வேண்டும் சேதுபதி என்று ஒரு பெரியவர் அவருக்கு அட்வைஸ் கொடுக்கிறார். 

அதன் பிறகு காய்கறி கடைக்கு செல்லும் விஜய் சேதுபதியிடம், காய்கறி விற்கும் பெண்மணி "காய்கறிகளை பார்த்தாலே அது நல்லதா கெட்டதா என்று தெரிந்துவிடும். ஆனால் மனிதர்கள் அப்படி அல்ல, ஆகவே கவனமாக செயல்படுங்கள் தம்பி என்று கூறுகிறார். கடுப்பாகி இளநீர் குடிக்க செல்லும் விஜய் சேதுபதியிடம் அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் ஒருவன், அங்கிள் தப்பா விளையாண்டா எப்பொழுது ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியும் அல்லவா? தெரியாவிட்டால் என்னை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்கிறான். 

உடனே பஸ்ஸில் ஏறி பயணிக்கும் விஜய் சேதுபதி, அங்கு நின்று கொண்டிருக்கும் பெண்ணுக்கு உட்கார இடம் கொடுக்கிறார். உடனே அதைக் கண்ட அருகில் இருந்த இளைஞர்கள், ப்ரோ இந்த சென்டிமென்டெல்லாம் 12Bயோடு நின்று விடட்டும், பிபி-யில் காட்டி விடாதீர்கள் என்று கூறுகிறார்கள். இப்படி தொடர்ச்சியாக பல்வேறு அட்வைஸுகளை கேட்டு முடிக்கும் விஜய் சேதுபதி, பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று.. "ஆளும் புதுசு, இந்த ஆட்டமும் புதுசு" என்று தனது பாணியில் பன்ச் பேசி, இயல்பான தனது வில்லத்தனமான சிரிப்போடு அந்த ப்ரோமோ முடிவதைக்கிறது.

அந்த கேரக்டரா? நோ வே.. கோட் பட மைக் மோகன் கதாபாத்திரம் - ரிஜெக்ட் செய்த இரு டாப் ஹீரோஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios