Asianet News TamilAsianet News Tamil

Vijay Sethupathi : இது வேற லெவல் காம்போ ஆச்சே.... விஜய்யுடன் சர்ப்ரைஸ் கூட்டணி அமைத்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ள புதிய படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Vijay Sethupathi And AL Vijay team up For First Time
Author
Tamil Nadu, First Published Dec 5, 2021, 2:44 PM IST

அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘கிரீடம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். இதையடுத்து ஆர்யாவுடன் மதராசபட்டினம், விக்ரமுடன் தாண்டவம், தெய்வத்திருமகள், விஜய்யுடன் தலைவா என அடுத்தடுத்து பிரபல நடிகர்களுடன் பணியாற்றியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘தலைவி’. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. கங்கனா, அரவிந்த் சாமி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

Vijay Sethupathi And AL Vijay team up For First Time

தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் ஏ.எல்.விஜய். இவர் இயக்க உள்ள புதிய படத்தில் நடிகை அனுஷ்கா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. ஏற்கனவே இயக்குனர் விஜய்யுடன் தாண்டவம், தெய்வத் திருமகள் போன்ற படங்களில் பணியாற்றியுள்ள அனுஷ்கா, தற்போது மூன்றாவது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

Vijay Sethupathi And AL Vijay team up For First Time

இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் மூலம் நடிகை அனுஷ்காவும், நடிகர் விஜய் சேதுபதியும் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios