vijay sethubathy 25th flim no heroine casting

பிரபல நடிகர் விஜய்சேதுபதி தன்னுடைய 25வது படத்தை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு 'சீதக்காதி' என்று தலைப்பு வைத்துள்ளனர். 

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர் மற்றும் ஹீரோயின் குறித்த தகவலை இயக்குனர் பாலாஜி தரணீதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் 'சிதக்காதி' படத்தில் விஜய்சேதுபதி கேரக்டரின் பெயர் 'அய்யா' என்றும் அவர் இந்த படத்தில் ஒரு நடிகராகவே நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நடிகர் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை நகைச்சுவையுடன் கூறும் படம்தான் 'சீதக்காதி' என்று அவர் கூறினார்.

மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியே இல்லை என்றும் அதனால் இந்த படத்தில் அவருக்கு ரொமான்ஸ் காட்சியும் இல்லை என்றும் கூறிய பாலாஜி, இந்த படம் ஹீரோயின் இல்லாமல் இருந்தாலும், நடிகைகளாக ரம்யா நம்பீசன் உள்பட பிரபல நடிகைகள் இந்த படத்தில் தோன்றுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, பழம்பெரும் நடிகர் மற்றும் இயக்குனர் மெளலி உள்பட பலர் நடிக்கவுள்ளதாகவும் பாலாஜி தரணீதரன் மேலும் கூறியுள்ளார்.