இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உருவாகி உள்ள படம் பேட்ட. பட நாயகன் ரஜினிகாந்துடன் திரிஷா, சிம்ரன், நவாசுதீன், விஜய் சேதுபதி என பல முக்கிய ஸ்டார்ஸ் நடித்து இருக்காங்க. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ள இந்த படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதியன்று சென்னை தாம்பரத்தில் உள்ள, ஒரு தனியார் கல்லூரியில் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவிற்கு சரியான நேரத்தில் ரஜினிகாந்த், கலாநிதிமாறன், திரிஷா மற்றும் படக்குழுவினர் வந்து சேர்ந்தனர்.

படத்தில் எப்படி வில்லன் சற்று தாமதமாக வருவார்களோ அதே போன்றே, இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து இருக்கும் விஜய் சேதுபதியும் விழாவிற்கு தாமதமாகவே வந்தார்.

ஏன் இவர் மட்டும் தாமதமாக வந்தார் என்பதற்கான பதில் இப்போது கிடைத்து உள்ளது. அதாவது, விஜய் சேதுபதி, ஒகேனக்கல்லில் படப்படிப்பில் இருந்துள்ளார். அவர் அங்கிருந்து சென்னை வந்து உடனே ஸ்பாட்டுக்கு செல்ல தயாரிப்பு  நிறுவனம் தனி விமானத்தை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது. இந்த விமானம் மூலம் அவசர அவசரமாக வந்து தான் பேட்ட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உள்ளார் விஜய் சேதுபதி