vijay sethubathi speaks about politics

நான் நிச்சயம் அரசியலுக்கு .............! விஜய் சேதுபதி அதிரடி..!

ரஜினி கமல் என்ற வரிசையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி இடம் பிடித்து உள்ளார்.

அதாவது நடிப்பிலா அல்லது அரசியலிலா என உடனே சந்தேகம் வரும் அல்லவா ..? கண்டிப்பாக நடிப்பில்தான்... அதே வேளையில் அரசியல் பற்றி வாய் திறந்த விஜய் சேதுபதி என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்க்கலாம்.

மக்கள் மனதில் இடம் பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது.. அதுவும் தமிழக மக்கள் மனதில் இடம் பிடிப்பது என்பது அரிதான காரியம்.. இதனை எல்லாம் வென்று அவருடைய இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.

இந்நிலையில், அவரிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு..." நான் நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டேன்...காரணம் எனக்கு மக்கள் மீது அக்கறை உள்ளது.. அதிக அக்கறை உள்ளது..ஆனால் அந்த அளவுக்கு அரசியல் அறிவு கிடையாது....அதற்கான எண்ணம் கூட என்கிட்டே கிடையாது.

அரசியல் அறிவு, அரசியல் நாட்டம் இவை எதுமே இல்லாமல் கண் மூடித்தனமாக அரசியலில் வர எனக்கு சுத்தமா விருப்பம் இல்லை என்று தெரிவித்து உள்ளார்

எது சரி ...எது தவறு...

தற்போது தமிழகத்தில் நடைப்பெற்று வரும் மக்கள் போராட்டம் முதல் மற்ற விஷயங்கள் பார்க்கும் போது ஒரு சிலர் சரி என்கிறார்கள்...ஒரு சிலர் தவறு என்று சொல்கிறார்கள்....எது சரி எது தவறு என்று முடிவெடுக்க கூட முடியாத நிலை தான் தற்போது உள்ளது..

ஆனால் இன்றைய இளைஞர்கள், தெளிவாக உள்ளார்கள்...அரசியல் அறிவோடு செயல்பட்டு வருகிறார்கள் என்றும், அவர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர் விஜய் சேதுபதி தெரிவித்து உள்ளார்.