அட்லீ - விஜய் கூட்டணியில் வெளியான "பிகில்" திரைப்படம் 50வது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் "தளபதி 64"   படத்தின் 4வது கட்ட ஷூட்டிங், கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக விஜய், லோகேஷ் கனராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். 

சிவமொகாவில் உள்ள பழைய சிறையில் பிரம்மாண்ட செட் அமைத்து, கடந்த 1ம் தேதி முதல் படக்குழுவினர் ஷூட்டிங் நடத்தி வருகின்றனர். அந்த சிறைச்சாலை செட்டில் தான் விஜய், விஜய்சேதுபதி இடையேயான சண்டை காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மூன்று தினங்களுக்கு முன்பிருந்து நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

படப்பிடிப்பிற்காக சிவமொக்கா சென்றுள்ள விஜய் பி.எச்.சாலையில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். விஜய் ஓட்டலில் தங்கியுள்ள செய்தி அறிந்த அவரது ரசிகர்கள் ஓட்டல் முன்பு குவியத் தொடங்கினர். இன்று ஷூட்டிங்கிற்கு கிளம்பும் முன்பு வெள்ளை சட்டை, கூலிங் கிளாஸ் சகிதமாக காரில் ஏறச்  சென்ற விஜய்யைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆராவாரம் செய்தனர். அதைப் பார்த்த விஜய் உடனடியாக ரசிகர்களைப் பார்த்து கை அசைத்துவிட்டு சென்றார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.