விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ள திரைப்படம் 'சர்க்கார்' இந்த படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் பல நாட்களாக காத்திருந்த நிலையில், இன்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது 'சர்க்கார்' படத்தின் இசை.

இந்த நிகழ்ச்சியில், பல பிரபலங்கள் கலந்து கொண்டு படம் குறித்து பேசினர். மேலும் இசை வெளியீட்டு விழா, நடைபெறும் தனியார் கல்லூரியை சுற்றிலும் பேனர், பிளக்ஸ், போன்றவற்றை வைத்து அசத்தி வருகிறார்கள் ரசிகர்கள்.

அதிலும் நடிகர் விஜய் வருகிறார் எனறால் சொல்லவா வேண்டும்? அரசியல் வாதிகளை வரவேற்பதை போல் வரவேற்கிறார்கள்.

இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட 75 வயது, ரசிகர் மாநில சர்க்கார்... மத்திய சர்க்கார்... எல்லாம் தெரியாது. 'தளபதியின் சர்க்கார்' தான் தெரியும். என கெத்து காட்டியுள்ளார். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , விஜய் நடிக்கும் மூன்றாவது திரைப்படமாக, 'சர்க்கார்' இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அதே போல், இந்த படத்தில் விஜய் அரசியல் வாதியாக நடித்துள்ளார் என கூறப்படுவதால் இந்த படத்தை வேற லெவலில் கொண்டாட தயாராகி வருகிறார்கள் என்பதன் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.