அரசியல் மற்றும் சினிமாத்துறையில் சமூக வலைத்தளங்களின் பங்கு அலப்பறியது. அரசியல் ரீதியான கருத்துக்களை நேரடியாக மக்களிடத்தில் சேர்க்கவும், படத்தின் புரொமோஷன்களுக்காக இந்தியாவில் சிறந்து விளங்கும் சமூக வலைதளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை இன்டர்நெட்டில் ஆக்கிரமித்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு ட்விட்டர் ட்ரெண்ட்ஸ் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் தொடர்பான ட்வீட்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. 

இதில் இந்தியளவில் முதல் 10 இடங்களில் 7 இடங்களை தென்னிந்திய சினிமா கைப்பற்றியுள்ளது. தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ #Sarkar படத்தின் ஹேஷ்டேக் முதலிடத்தையும், அதைத் தொடர்ந்து ‘விஸ்வாசம்’ #Viswasam  இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதனைத்தொடர்ந்து,  4.மகேஷ் பாபுவின் ‘பரத் அனே நேனு’#BharatAneNenu,  4. ஜூனியர் என்.டி.ஆரின் ‘அரவிந்த சமேதா’ #AravindhaSametha, 5. ராம் சரணின் ‘ரங்காஸ்தலம்’ #Rangasthalam, 6. சூப்பர் ஸ்டாரின் ‘காலா’ #Kaala என ட்ரெண்ட் நீள்கிறது. மேலும், ட்விட்டரில் அதிக செல்வாக்கு பெற்ற மொமெண்ட்ஸாக விஜய்யின் ‘சர்கார்’ முதலிடத்திலும், ‘மீ டூ’ இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதில் #Sarkar #MeToo #KarnatakaElection #KeralaFloods #Aadhaar #JusticeForAsifa #DeepVeer #IPL2018 #WhistlePodu #AsianGames2018 என்ற ஹேஷ்டேக்குகளும் இடம்பிடித்தன.

இதேபோல், அதிகம் லைக் செய்த ட்வீட்டாக, விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா, கார்வாசவுத் என்ற பண்டிகையின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம், சுமார் 2,15,000 லைக்ஸ்களை பெற்றுள்ளது. அதிகம் பேசப்பட்ட அரசியல் தலைவர்களின் டாப் 10 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தையும், அவரை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் உள்ளனர்.