சர்கார்’ ஆடியோ வெளியீட்டு விளம்பரம் எதிர்பார்த்தை டபுளாக ஒர்க்-அவுட் ஆகியுள்ள நிலையில், விஜய் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு படத்தின் கதை என்ன என்பதாகத்தானே இருக்கவேண்டும்? இது தொடர்பாக ‘சர்கார்’ படத்தில் பணிபுரியும் சில சின்ன லெவல் டெக்னீஷியன்களுடன் அளவளாவிய போது படத்தின் கதைபோல ஒன்று லீக்காகியுள்ளது.

 படத்தின் கதைப்படி, அனைவரும் நினப்பது போல விஜய் ஒரு அரசியல்வாதி அல்ல. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை நடத்துபவர். அந்த கார்ப்பரேட் நிறுவனம்தான் அரசியல்வாதிகளின் வெற்றிதோல்வியையே நிர்ணயிக்க வைக்கிறது. இப்படித்தான் விஜய், அரசியலுடன் கைகோக்கிறார் என்கிறது சர்கார் தரப்பு. புரியவில்லையா?

உலக அளவில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றியும், இந்திய அளவில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பெற்ற வெற்றியும்தான் ’சர்கார்’ கதையின் ஆணிவேர்.

ட்ரம்ப், மோடி ஆகிய இருவரும் தனியார் விளம்பர நிறுவனத்தின் மூலமாக அனைத்துத் தளங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டனர். இவர்தான் எதிர்காலம் என்று அனைத்து தரப்பு மக்களயும் நம்பி மயங்கவைத்தன அந்த விளம்பரங்கள்.

அப்படி மக்களை மயக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் வலைதளங்கள் மூலம் என்னமாதிரியான வலைகளை வீசுகின்றன. எப்படிப்பட்ட சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றன என்பதை அலசும் படமே ‘சர்கார். இதன் முதல் பாதியில் மோசமான அரசியல்வாதி ஒருவரை தனது கார்ப்பரேட் சாதுரியத்தின் மூலம் முதல்வராக்கும் விஜய், இரண்டாவது பாதியில் எப்படி மண்ணைக் கவ்வ வைக்கிறார் என்று போகிறது ‘சர்கார்’ கதை.

அரசியல்வாதிகளுக்கு ஆப்பு வைத்தது மீதி இருக்கும் கேப்பில் விஜய்க்கு டூயட்டும், யோகிபாபுவின் காமெடிகளும் தேவையான அளவு இடம்பெற்றிருக்கின்றன என்கிறார்கள் ‘சர்கார்’ பட பங்காளிகள்.

இந்தி சினிமாவிலும் வலுவாகக் கால் பதித்துவிட்ட முருகதாஸ், சர்கார் கதையை முதலில்  ஒரு இந்தியத் திரைப்படமாக எடுக்கவே திட்டமிட்டிருக்கிறார். ஆனால், கதைக்களம் தமிழக மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று விஜய் விரும்பியதால், தமிழக அரசியல்வாதி ஒருவரை புரமோட் செய்ய விஜய் அமெரிக்காவிலிருந்து வேலை செய்வதாக கதை மாற்றப்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழ்க்கதையில் மத்திய அரசின் போக்குகளும் மிகக்கடுமையாக அங்கங்கே விமரிக்கப்பட்டிருப்பட்டிருப்பதால், ரிலீஸுக்குப் பிறகு ஹெச்.ராஜாவுக்கும், மேடம் தமிழிசைக்கும் ‘சர்கார்’ தொடர்பாக நிறைய வேலைகளும் இருக்கும் என்பது அவர்கள் சொல்லாமல் சொன்ன சேதி.