தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. சமீபத்தில் கூட நடந்த பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் கூட்டம், மாநாடு நடக்கும் இடத்தை போல் பிரமாண்டமாக இருந்தது. இதில் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது விஜய்யின் கிளாசிக் லுக், ஆமாங்னா, அதே தாங்கனா தளபதி தலைவர் ஸ்டைலில் பயங்கர மாஸா இருந்தாருங்க என ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர். 

மெர்சல், தெறி படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக அட்லீ படத்தில் இணைந்துள்ளார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக சென்னை அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. இந்த விழாவில் விஜய்யின் அரசியல் ஸ்டேட் முதல் சென்டரல் வரை வழக்கம் போல ஒரு ஆட்டு ஆட்டியது. பதிலுக்கு நம்ம ஊரு அமைச்சர்களும், எம்பிக்களும் கொந்தளிக்க எதிரணியில் உள்ள லீடர்ஸ் தளபதியை விட்டுக்கொடுக்காமல் சப்போர்ட் செய்தது.

ஹய்யோ... ரூட்டு மாறிப்போயிட்டோமே, சாரி மேட்டருக்கு வருவோம், விஜய்யின் பேச்சைப் போலவே அவரது லுக்,  ஒட்டுமொத்த ஆடியன்ஸையும், விழாவுக்கு வந்திருந்த நட்சத்திரங்களும் விஜய் லுக்கை பார்த்து அசந்து போயினர். அப்படி பெருசா ஒன்னும் இல்லையென சொன்னாலும்,  ரொம்ப யோசிக்காம அவரை பார்த்தாலே தெரிந்து விடும் அது வேறு ஒன்றும் இல்ல,  ஆயிரத்தில் ஒருவன் தலைவர் எம்.ஜி.ஆர் மாதிரியே இடது பக்கமாக சுருண்ட முடி, முறுக்கு மீச எக்ஸ்ட்ராவா சால்ட் அண்ட் பெப்பர்ல தாடி மட்டுமே இருக்கிறது. இதை லுக்கை பார்த்த ரசிகர்கள் பயங்கர ஹேப்பி.

என்னடா தளபதி லுக் ஒரு விதமா இருக்கே என பார்த்தால் மனுஷன் அடுத்த படத்திற்காக தலைவர் லுக்கில் தாறுமாறா வந்துருக்காரே என பிரமித்து போயுள்ளனர். அடுத்ததாக மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் கதையைக் கேட்டவுடன் ஓகே சொன்ன விஜய் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம்.

தளபதி 64 படம் முழுக்க முழுக்க டார்க் காமெடி படமாக இருக்குமாம், பழைய ப்ளாக் அண்ட் வொய்ட் மாதிரி சீரியஸான கதை, ஆயிரத்தில் ஒருவன் மாதிரி செம ஆக்சன் த்ரில்லர் கலந்த  படமாக எடுக்கவுள்ளார்களாம், ஆனால் படத்தில் த்ரில்லிங் கூட காமெடியும் இருக்குமாம். டார்க் ஹியூமர் வகை படங்களில் முக்கிய இடத்தை "சூது கவ்வும்" பிடித்துள்ளது. அந்த படத்தின் கதை மிகவும் சீரியசான கதை என சொன்னாலும், இந்த படம் முழுக்க முழுக்க காமெடிகளை வைத்து வித்தியாசமாக உருவாக்கி இருப்பார்கள். அதேபோல தளபதி 64 படத்தையும் உருவாக்க உள்ளார்களாம், அதற்காக தலைவர் எம்.ஜி.ஆர் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் இருப்பது போல ஹேர் ஸ்டைல், முறுக்கு மீச என பயங்கர மாஸ் லுக்கில் வரவுள்ளாராம்.