கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் விஜய் அசின் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான படம் போக்கிரி. இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க பிரபுதேவா மும்பரமாகியுள்ளார்.

விஜய்யின் ஹிட் லிஸ்டில் போக்கிரிக்கு முக்கியமான இடம் உண்டு என சொல்லணும், விஜய்யின் குறிப்பிட்ட சில மிக பிரமாண்டம் மட்டும் இல்லாமல் அனைவராலும் மிகவும் கவர்ந்த பட பட்டியலில் கில்லி அதுக்கு அடுத்து படம் என்றால் அது ''போக்கிரி'' இந்த இரண்டு படங்கள் தான் விஜய்யின் மார்க்கெட் மிக பெரிய அந்தஸ்தை கொடுத்த படம் என சொல்லலாம்.

சமீபத்தில் அதிக படங்கள் இரண்டாம் பாகங்களாக வந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பழைய வெற்றி படங்களை தூசு தட்ட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் இதுவரை இரண்டாம் பாகம் என்று விஜய்க்கு ஒரு படங்கள் அறிவிப்பு கூட இது வரை வந்தது இல்லை அந்த பெயரை அழிக்க ''போக்கிரி இரண்டாம் பாகம்'' எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

பிரபுதேவா இயக்கியிருந்த இந்தப் படம் தெலுங்கில் வெளியான போக்கிரி படத்தின் ரீமேக். இதே படத்தை அப்படியே இந்தியில் 'வான்டட்' என்ற பெயரில் சல்மான்கான் தலையில் கட்டினார். அங்கும் சூப்பர் ஹிட் தான்.

இதனை அடுத்து அண்மையில் சல்மான் கான், போக்கிரியின் இரண்டாம் பாக கதையோடு வருமாறு பிரபுதேவாவிடம் கேட்டிருப்பதாகவும் அவர் கதை தேடிவருவதாகவும் கூறப்படுகிறது. அப்படி இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் ஒரே நேரத்தில் தமிழிலும் எடுக்கும் திட்டமும் பிரபுதேவாவிடம் உள்ளதாம்.  ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தோடு இதன் அதிகாரபூர்வ தகவலுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.