விஜய் நடிப்பில் அட்லி மூன்றாவது முறையாக இயக்கி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.

விஜய் அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இதில்  அப்பாவாக நடித்து வரும் விஜய் கேரக்டரின் பெயர் 'பிகில்' என்றும் மகன் விஜய்யின் கேரக்டர் பெயர் 'மைக்கேல்' என்றும், அவர் பெண்கள் கால் பந்து விளையாட்டு அணியின் பயிற்சியாளராக நடித்து வருவதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், தற்போது இந்த படத்திற்காக விஜய் பயன்படுத்திய ஐடி கார்டு வெளியாகியுள்ளது. அதில் விஜய்யின் புகைப்படத்துடன் மைக்கேல் என்ற பெயரும், அவர் தலைமை பயிற்சியாளர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

அந்த புகைப்படம் இதோ: