vijay photo shoot released

ஏ.ஆர்.முருகாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்திற்காக போட்டோ ஷூட் புகைப்படம் வெளியானது.

மெர்சல் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பின் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் மற்றும் கலை இயக்குநராக சந்தானம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். நாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளது.

ஏ.ஆர்.முருகதாசுடன் துப்பாக்கி, கத்தி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வேட்டைக்காரன், சுறா என விஜய் நடித்தார். மூன்றாவது முறையாக சன் பிக்சர்ஸ் மற்றும் முருகதாஸ் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை எற்படுதியுள்ளநிலையில், இப்படத்திற்கான போட்டோ சூட் இன்று சென்னையில் நடந்தது இதில் விஜய் இரண்டு கெட்டப்பில் வருவது உறுதியாகியுள்ளது.

இந்த இரண்டு கெட்டப்பில் ஒன்று வயாதான பணக்காரர் போல தோற்றமளிக்கிறார். மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறார். மற்றொன்று மிகவும் இளமையாகவும் ஸ்லிம்மாகவும் காணப்படும் போட்டோஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.