ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்க வேண்டும் என்பது தான் தற்போது பலரது லட்சியமாக மாறியுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றினால் மட்டும் போதாது உச்சநீதி மற்ற தடையை முழுமையாக நீக்க கோரியும், பீட்டா என்னும் அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் கடந்த ஐந்து நாட்களாக சென்னை மெரீனாவில் பனி , வெய்யில் என பாராமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு அனைத்து துறையினர்களும் தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர். பல காவலர்கள் வேலையை போனாலும் பரவாயில்லை, நான் ஒரு தமிழன் என ஜல்லிக்கட்டுக்கு சீருடையுடன் போராட்டத்தில் பங்கு கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டுக்காக ஒருநாள் அடையாள மெளன அறப்போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் ரஜினி, கமல், அஜித் உள்பட பலர் முன்னனி நடிகர்கள் கலந்து கொண்டனர். இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை இது பலருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இருப்பினும் நேற்றிரவு சென்னை மெரினாவில் நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகனாக அல்லாமல் ஒரு தமிழனாக மக்களோடு மக்களாக முகத்தில் முகமூடி அணிந்து போராட்டத்தில் கலந்துகொண்டார்.
அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கு பெற்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
