விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் "சிங்கப்பெண்ணே" பாடல் சாதனையை அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ பட பாடல் பெற்று  சாதனை படைத்து உள்ளது.

விஜய் சாதனையை முறியடித்த அஜித்..! வேற லெவல் ரீச் கொடுத்த தல..!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் "சிங்கப்பெண்ணே" பாடல் சாதனையை அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ பட பாடல் பெற்று சாதனை படைத்து உள்ளது.அதாவது, வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி அஜித் நடித்து வெளிவர உள்ளது நேர்கொண்ட பார்வை திரைப்படம். இந்த படத்தின் பாடல் கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியானது. 

இதில் என்ன விஷேஷம் என்றால், விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் "சிங்கப்பெண்ணே" பாடல் யூடியூபில் 44 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்தது.ஆனால் 'நேர்கொண்ட பார்வையின்' படத்தின் "அகலாதே" பாடல் 24 மணி நேரத்திலேயே 50 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அப்படிப்பார்த்தால், இதன்மூலம் விஜய்யின் "சிங்கப்பெண்ணே" பாடல் சாதனையை அஜித்தின் "அகலாதே" பாடல் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.