vijay nithiyamenon first schedule shooting is over

பைரவா படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய்-நித்யாமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு 80% முடிந்துவிட்டதாகவும், இன்னும் ஒருசில காட்சிகள் மட்டுமே இருவரும் இணைந்து நடிக்க வேண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 10ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் விஜய்-காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதே போல் விரைவில் சமந்தா, எஸ்.ஜே.சூர்யா கட்சிகளும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் படமாக்க படும் என படக்குழுவினர் மத்தியில் கிசுகிசுக்க படுகிறது.