மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் 'தளபதி-64'. பிரபல தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மிகபிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்தில், கல்லூரி பேராசிரியராக விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

'தளபதி-64' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்துமுடிந்துவிட்ட நிலையில், 2-வது கட்ட படப்பிடிப்பு டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், விஜய் தொடர்பான கல்லூரி காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன. 

படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படங்களம், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவும், நடிகர் விஜய்யும் சந்தித்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

அசத்தலான ஹேர் ஸ்டைலுடன் யங் மற்றும் ஸ்டைலிஸ் லுக்கில் இருக்கும் விஜய்யின் இந்த புகைப்படங்கள், தளபதி ரசிகர்களை உற்சாகத்தில் துள்ளி குதிக்க வைத்துள்ளது. 

அந்த மகிழ்ச்சியில், டுவிட்டரில் தளபதி-64 என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி அந்த புகைப்படங்களை பகிர்ந்து இந்திய அளவில் டிரெண்டிங் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே, 2-வது கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக கர்நாடகாவில் படப்பிடிப்பை நடத்த 'தளபதி-64' படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், டிசம்பர் முதல்வாரம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய், விஜய்சேதுபதி, அந்தோணி வர்கீஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.