தலைவா என்ற படத்தில் டைம் டூ லீட் என்ற வார்த்தையால், அரசியலுக்கு வராமலே அரசியல்வாதி அவதாரமெடுத்தார் இளையதளபதி விஜய். அந்த படத்திற்கு அதிமுகவிலிருந்து கொடுத்த குடைச்சலால் நொந்து போனது அவரது மக்கள் இயக்கம், ஜெயலலிதா மறைவை அடுத்து விஜய் தொடர்ந்து, மத்திய மாநில அரசை கடுமையாக விமர்சித்து கருத்துக்கள் சொல்லி வந்தார். இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள்  மூலம் அவர்கள் செய்யும் செயல்களும் பக்கா அரசியல்தனத்தை வெளிப்படுத்துகிறது. தளபதி எப்போது அரசியலில் என்ட்ரி கொடுப்பார்? என ஏங்கி தவிக்கிறது ரசிகர் கூட்டம்.

இந்நிலையில் வரும் ஜூன் 22-ம் தேதி விஜயின் பிறந்தநாள். வருஷா வருஷம் தன் பிறந்த நாளின் மூலம் தன் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஏதாவது சர்ப்பரைஸ் கொடுப்பார் விஜய். சினிமாவில் துவக்கத்தில் உங்கள் விஜய் என்று அடையாளமிடப்பட்டவர் பின் இளைய தளபதி சொன்னார்கள். இந்த இளையதளபதி பட்டமே தொடர்ந்துகொண்டிருந்த நேரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிறந்தநாளில் வெளியான மெர்சல்  ஃபஸ்ட் லுக் போஸ்டரில்  ‘தளபதி’ என்ற பட்டம் போட்டனர்.  அந்த போஸ்ட்ரைப் பார்த்த  திமுக தொண்டர்கள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தளபதி என்றால் அது ஸ்டாலின் மட்டும்தான். என்று விஜயை தாறுமாறாக விமர்சித்தனர்.

ஆனால் அத்தனை எதிர்ப்பையும் மீறி அந்தப் பட்டம் விஜய்க்கு பக்காவாய் ஒட்டிக் கொண்டது. அதிலும், மெர்சலில் வரும் அப்பா விஜய்யின் தளபதி பெயர் வைத்து தளபதி... தளபதி... என்றே சொல்லவைத்தனர்.

இந்த நிலையில் இந்த பிறந்த நாள்  மூலம் தளபதியிலிருந்து ‘தளபதியார்’ ஆகிறாராம் விஜய். பொதுவாக ஸ்டாலினை திமுகவினர் "தளபதியார்" என்றுதான் மரியாதையாக குறிப்பிடுவார்கள். ஆனால் கலைஞர் கருணாநிதி மறைந்ததை அடுத்து இப்போது ஸ்டாலின் திமுகவின் தலைவராகிவிட்டதால், அவரை "தலைவர்"என்றே அழைப்பதால். இந்த சூழலில் யாருமே திணித்து வழங்கிடாமல், உருவாக்கிடாமலும் , இந்த பிறந்தநாளிலிருந்து "தளபதியார்" எனும் பட்டமானது விஜய்க்கு தானாக வந்து சேர்ந்துள்ளது!  

விஜய் பிறந்தநாள் வைப்ரேஷனை உருவாக்கிட துவங்கிவிட்டவர்கள் அவரது ரசிகர்கள், அது குறித்த அறிவிப்புகள், போஸ்டர்கள், வாட்ஸ் அப் டிஸைன்கள் என வெறித்தனமாக இப்படி ‘தளபதியார்’ என்றே விஜய்யை மரியாதையுடன் போட்டு சமூக வலைத்தளங்களை மெர்சலாக்குகிறார்கள்.